Subscribe Us

header ads

அரபு நாட்டை சேர்ந்த இளைஞருடன் தொடர்பு வைத்துக் கொண்ட இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் கொலை


பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் சித்தரவதை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரபு நாட்டை சேர்ந்த இளைஞருடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி 19 வயதே ஆன இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Celine Dookhran என்ற அந்த இளம்பெண்ணை அவரது குடியிருப்பில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர்.
மட்டுமின்றி இவரது தோழி ஒருவரையும் குறித்த தாக்குதலில் கழுத்தை துண்டிக்க முயறிசி நடந்துள்ளது. ஆனால் அவர் குறித்த தாக்குதலில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார்.
குறித்த இளம்பெண்கள் இருவரையும் கயிற்றால் பிணைத்து, வாயை மூடி ஒரு போர்வையில் புதைத்து தெருவில் வீசிவிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பியதாக கூறப்படுகிறது.
Dookhran குடியிருக்கும் வீட்டில் இருந்து 5 மைல் தொலைவில் அவரை கடத்திச் சென்று பாழடைந்த பங்களா ஒன்றில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் 33 வயதான Mujahid Arshid என்பவர் நேற்று விம்பிள்டன் நீதிமன்றம் முன்னர் ஆஜராகி தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான 28 வயதான Vincent Tappu கடத்தல் மற்றும் பாலியல் குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.
Dookhran கொல்லப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையானது வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டு உள்ளது, அவருடைய கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்ட Dookhran மேக்-அப் துறை தொடர்பாக படித்து வருகிறார், ஏற்கனவே ஒரு திரில்லர் படத்தில் மேக்-அப் பணியாளராக பணியாற்றியும் உள்ளார். “கொல்லப்பட்ட பெண் லண்டனில் வசிக்கும் அரபிக் இஸ்லாமியரான ஒருவருடன் தொடர்பு கொண்டு இருந்து உள்ளார், இந்திய இஸ்லாமியர் என்பதால் அவர்கள் அதனை ஏற்கவில்லை,” என வழக்கறிஞர் கூறிஉள்ளார். இதுதொடர்பாக குற்றவாளிகளை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.




Post a Comment

0 Comments