Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (கரண்டில்லா நாளில்...) கவிதை தொகுப்பு.



லோ பெற்றரி அலர்ட்

லொள் லொள் போடும்.
வை பை ஓப் ஆகி
லைபை வெறுப்பேற்றும்



பவர் பேங் எங்க
அவர் சத்தம் போட
மீனறுக்க அடை வெச்சேன்
நோனா பதில் கொடுப்பா



பிளண்டரின்றி மாசி இடித்து
கழண்டு போகும் கை மூட்டு
ப்ரிஜ்ஜில் இருக்கின்ற
கறிச்சட்டி நாறும்



ஊடகம் ஓப் ஆக
நாடகம் மிஸ் ஆக
ஜெனி வாங்கத் தெரியாதா
பெனியனுக்கு ஏச்சு விழும்



சேர்ட்ட அயன் பண்ணல்லயா
கேட்டுக் கோபம் வரும்
மெஷினுக்க உடுப்பு எல்லாம்
குசினிக்குள் குரல் வரும்



ஈ பறந்து மொய்க்க
சீ என்று கை விரட்டும்.
பெனியனில் வியர்வை
சனியனாய் ஓடும்.



கரண்டில்லா கோபம்
கண்டபடி பேச்சு எழ
மூத்தம்மா அதக் கண்டு
பேத்தியிடம் கேட்டா.



ஏண்டி புள்ள இப்படி
இண்டைக்கு ஒரு நாள்
கரண்டில்லை எண்டு
கடுப்பாகிக் கதைக்கிறீங்க.



காலமெல்லாம் நாங்க
கரண்டின்றி இருந்தோமே
வேல வெட்டியெல்லாம்
விடாம செய்தோமே



கரண்டில்லா வாழ்க்கையும்
காண வேணும்டி
இருண்ட போன இரவிலயும்
இருக்க வேணும்டி



சொகுசான வாழ்க்கையோ
சோதனை வாழ்க்கையோ
மனசுதான் காரணம்
மகிழ்வுக்கும் துன்பத்துக்கும்



மூத்தம்மா சொன்னது
முற்றிலும் உண்மை
ஏற்றுக் கொண்டவர்க்கு
எல்லாமே இன்பம்

Post a Comment

0 Comments