சூதாட்டத்தில் மனைவியை வைத்து விளையாடி 2 பேரிடம் கணவர் தோல்வி அடைந்ததனை அடுத்து அவர்களால் மனைவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியா மத்திய பிரதேசத்தி;ன இந்தூரில் 38 வயது இளம்பெண் ஒருவர் பொலிஸார் நடத்திய பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் பாலியல் துஷ்பிரயோக புகார் அளித்துள்ளார்.
அதில், சில நாட்களுக்கு முன் எனது கணவர் என்னை வைத்து 2 பேருடன் சூதாடியுள்ளார்.
அதன்பின் அவர்களிடம் எனது கணவர் தோல்வி அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து என்னை 2 பேரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினர்.
உனது கணவரிடம் இருந்து உன்னை வெற்றி பெற்றுள்ளோம் என அவர்கள் என்னிடம் கூறினர் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின் தனது கணவரிடம் இருந்து அந்த பெண் பிரிந்து வாழ்ந்துள்ளார்.
ஆனால் கணவரும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும் தொடர்ச்சியாக தன்னை பாலியல் வன்முறை செய்து வருகின்றனர் என பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பெண்ணின் புகாருக்கு பதில் அளிக்கும்படி தொடர்புடைய நபர்களுக்கு பொலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் பற்றி உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என மகளிர் காவல் நிலைய பெண் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.


0 Comments