கனியவள ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் விடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, சேவைக்கு திரும்பாத பணியாளர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கனியவள ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments