Subscribe Us

header ads

நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்த டாக்டர்கள் டிவியில் கால்பந்து போட்டியை ரசித்து பார்த்த கொடூரம் (வீடியோ)



தெற்கு அமெரிக்கா நாடான சிலியில்  உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


அதில், ஆப்ரேஷன் தியேட்டரில் நினைவிழந்த நிலையில் நோயாளி ஒருவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அவரின் இருபுறத்திலும் நிற்கும் மருத்துவர்கள் நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்தார்கள்.


அங்கிருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் கால்பந்து போட்டி ஒளிபரப்பாகியது. அப்போது, கால்பந்து வீரர் கோல் அடிக்கும் தருணத்தை ஆப்ரேஷன் செய்வதை நிறுத்தி விட்டு மருத்துவர்கள் திரும்பி பார்க்கிறார்கள்.


அருகில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் போட்டியை துள்ளி குதித்து கண்டுகளிப்பது போல வீடியோவில் உள்ளது. வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments