மாணவர்களை, சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது, பொறுப்புதாரிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். முக்கியமாக நீர்நிலைகளில்.
ஒவ்வொரு வருசமும் O/L எழுதி முடித்த மாணவர்களை கூட்டிட்டு போய் யாரையாச்சும் பலி கொடுக்கும் செய்திகளும், சுற்றுலா சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கிப் பலி போன்ற செய்திகளும் நமக்கு பழகிப்போச்சு தானே.
பராக்கு பார்த்துக்கொண்டும், வயிற்றை நிறைத்து ஏப்பம் விட்டுக்கொண்டும் இருந்துவிட்டு,
ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்த பின்னர் "எங்களுக்கு தெரியாம நடந்துருச்சு, எங்கட கட்டுப்பாட்ட மீறி நடந்திருக்காய்ங்க" போன்ற மொக்கை காரணங்களை சொல்கிறீரெனில்...
//அப்போ எதுக்குடா நாங்க பொறுப்புனு சொல்லி கூட்டிட்டு போனீங்க?//
இதுபோன்ற 3ம் நம்பர் கேள்விகளே ரிட்டர்ன் வரும். அப்போ மட்டும் ஒழுக்கம் பேச வந்துடுவாய்ங்க அந்த பொறுப்புதாரிங்க.
#அப்துல்லாஹ் என்ற ஒரு மாணவனின் ஜனாஸா கற்றுத்தந்தவை.
I.N


0 Comments