அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய மோட்டார் சைக்கிள் ஒரு லீற்றர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீற்றர் தூரத்துக்கு தங்குதடையின்றி ஓடக் கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
டி பவர் எச்20 என பெயரிட்டுள்ள இந்த புதிய மோட்டார் சைக்கிள் சாதாரண தண்ணீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட காபன் மோனொக்சைட் போன்ற வேதிப் பொருள்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூறும் ரிக்கேர்டோ இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பற்றரியில் இருந்து கொள்கலனில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
இதன்மூலம் கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லீற்றர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீற்றர் வரை செல்லும் என்று கூறியுள்ளார்.


0 Comments