தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக கத்தார் மீது அரபுநாடுகள் குற்றம்சாட்டின.
அதனுடன் ராஜிய உறவை துண்டித்துக்கொண்டுள்ளன.
உறவை புதுப்பித்துக்கொள்ள 13 நிபந்தனைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், அதுகுறித்து கத்தார் அரசு தீவிரமாக பரிசீலித்துள்ளது.
நிபந்தனைகளை ஏற்பது தொடர்பாக அமெரிக்கா, குவைத் அரசுகளின் உதவியையும் கத்தார் கேட்டுப்பெற்றுள்ளது.
இறுதியாக 5 நிபந்தனைகளை ஏற்க கத்தார் தயாராக உள்ளது என தெரியவந்துள்ளது.
#தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்படக்கூடிய நபர்களை கத்தாரில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
#தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது தொடர்பான அனைத்து ஆவணங்களும் காட்டப்படும்.
#துருக்கி ராணுவம் திருப்பி அனுப்பப்படும்.
#வளைகுடா நாடுகளின் ஒற்றுமை, பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படும்.
#தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர் தொடர்பாக அரசுவசம் உள்ள அனைத்து தகவல்களும் பகிரப்படும்.
இவ்வாறு கத்தார் அரசு முடிவெடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒற்றுமை நிலவ கத்தார் விரும்புகிறது.
எனவே, இதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை டிரம்ப் தலைமையில் செய்துகொள்ளலாம் என்ற யோசனையும் கத்தாரால் முன்வைக்கப்பட்டுள்ளது.


0 Comments