Subscribe Us

header ads

அபுதாபி குடியிருப்பு பகுதி சோதனையில் 40 பேர் மீது அபராதம் விதிப்பு!



அபுதாபி மாநகராட்சி அதிகாரிகளால் அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு நெருக்கடியான வசிப்பிடங்களில் அடைபட்டு கிடப்போர் மீது அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. பொதுவாக குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களே இப்படியானதொரு நெருக்கடி வாழ்க்கைக்கு தள்ளப்படுகின்றன.

அபுதாபி முனிசிபாலிட்டி அதிகாரிகளால் 'அபுதாபி பனியாஸ்' பகுதியில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து சுமார் 40 பேர் மீது அபராதங்கள் விதிக்கப்பட்டன. இதேபோன்ற சோதனைகள் முஸஃபா, அல் வத்பா, ஷவாமக் ஆகிய பகுதிகளிலும் நடத்தப்பெற்று வருகின்றன.

அபுதாபி மாநகராட்சி சட்டப்படி, ஒரு பெட்ரூமில் அதிகப்பட்சம் 3 பேச்சுலர்கள் மட்டுமே தங்கலாம், வராந்தா, சமயலறை போன்ற பகுதிகளை தங்குமிடமாக பாவிக்கக்கூடாது. வில்லா அல்லது பிளாட்டுகளில் ஒற்றை குடும்பம் மட்டுமே தங்கலாம். தோட்டங்களில் உள்ள வீடுகளில் உரிய அனுமதியின்றி தங்கவைப்பதும் குற்றமாகும்.

முனிசிபாலிட்டியின் அனுமதியில்லாமல் தங்குமிடங்களில் தடுப்புக்களை ஏற்படுத்துவது, கூடுதல் கட்டுமானங்களை செய்து கொள்வது, கட்டுமானங்களை சேதப்படுத்துவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து 10 ஆயரம் முதல் 1 லட்சம் வரை அபராதங்கள் விதிக்கப்படும். மேலும் இக்குற்றத்தை மறுபடியும் செய்வோர் மீது 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அபரதாமும் குடியிருக்கும் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றவும் உத்தரவிடலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments