பாறுக் ஷிஹான்
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் நேற்று (17) 27 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கணித,விஞ்ஞான,தொழிநுற்ப பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கே இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட் டு மற்றும் இளைஞர்விவகார அமைச்சின் செயலகத்தில் வைத்து ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.
நாளை முதல் ஆசிரியர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கும் வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.































0 Comments