Subscribe Us

இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில் 6 பந்­து­களில் 6 சிக்­ஸர்கள் அடித்து ரோஸ் ஒயிட்லே சாதனை


இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில் 6 பந்­து­களில் 6 சிக்­ஸர்கள் அடித்து ரோஸ் ஒயிட்லே சாதனை படைத்தார். இருந்­தாலும் அந்த அணி தோல்­வியைத் தழுவிக் கொண்­டது.
இங்­கி­லாந்தில் நடை­பெற்று வரும் 2017 நொட்வெஸ்ட் இரு­ப­துக்கு 20  கிரிக்கெட் தொடர் போட்­டியில் வொர்­செஸ்­டர்ஷைர் அணியை சேர்ந்த ரோஸ் வைட்லே ஒரு ஓவரில் 6 சிக்­ஸர்­களை விளாசி சாதனை படைத்­துள்ளார்.
இதில்  நேற்று நடை­பெற்ற ஆட்­டத்தில் வொர்­செஸ்­டர்ஷைர் அணியும் யோர்க் ஷைர் அணியும் மோதின.
இதில் முதலில் விளை­யா­டிய யோர்க் ஷைர்  அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 233 ஓட்­டங்­களைக் குவித்­தது. அதி­க­பட்­ச­மாக அந்த அணியை சேர்ந்த டேவிட் வெல்லே 118 ஓட்­டங்­களை விளா­சினார். 
234 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக கொண்டு கள­மி­றங்­கிய வொர்­செஸ்­டர்ஷைர் அணி, தொடக்கம் முதலே நிதா­ன­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யது.
அந்த அணியை சேர்ந்த ரோஸ் ஒயிட்லே 20 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த நிலையில் 16ஆவது ஓவரை வீச வந்த கார்­வரின் பந்தை எல்லா பக்­கமும் சித­ற­டித்தார்.
அவர் வீசிய 6 பந்­து­க­ளிலும் 6 சிக்­ஸர்­களை அடித்து ரோஸ் ஒயிட்லே சாதனை படைத்தார். 26 பந்­து­களில் 65 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த நிலையில் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார்.
இருப்­பினும் அவரின் வெறித்த­ன­மான ஆட்டம் அணிக்கு கை­கொ­டுக்­க­வில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 196 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதையடுத்து 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Post a Comment

0 Comments