கற்பிட்டி பிரதேசத்தில் மண்டலக்குடா, தில்லையூர் மற்றும் தேத்தாவாடி ஆகியன மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும்.
இப்பகுதிகளில் 400 க்கும் அதிகமான குடுபங்கள் வாழ்ந்து வருகின்றன.
பெரும்பான்மையனா மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற
நிலையில் குடிசைகளில் வாழும் இம்மக்கள் குடிநீர் வசதி, மின்சாரம் வசதி சரியான முறையில் கிடைக்காமல் கஷ்டப்படுகிறனர்.
மழை காலங்களில் இவர்களது குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன.
இப் பக்தியில் வாழும் பல குடும்பங்களுக்கு உலர்
உணவுப்பொருட்கள் கடந்த வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Kalpitiya
Development Society - Qatar (KDSQ) (கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பான KDSQ) கடந்த நான்கு வருடங்களாக ரமழான் மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளும் “ரமழான் உலர்
உணவு அன்பளிப்பு திட்டம்” கண்டந்த வருடம் முதல் “Feed a Needy Neighbor” என்ற சுலோகத்தின் கீழ் இவ்வேலைத்
திட்டத்தை செயற்படுத்தப்பட்டு
வருகிறது, இந்த முறையும் வெற்றிகரமாக பல குடும்பங்களுக்கு
உலர் உணவுப்பொருட்கள் KDSQ ( Kalpitiya
Development Society - Qatar) அமைப்பின் கற்பிட்டியின் இணைப்பாளர் தலைமையில்
விநியோகிக்கப்ட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
KDSQ ( Kalpitiya
Development Society Qatar) அமைப்பு மேற்கொண்ட இவ்வுதவி ரமழான் தினங்களில் அவர்களுக்கு பெரிதும்
உதவியாக இருக்கும் எனத் தெரிவித்த அவர்கள் கட்டாரில்
வாழும் கற்பிட்டி சகோதரர்களுக்காக பிரார்தித்ததுடன் தமக்கு தேவையான ஏனைய அடிப்படை
வசதிகளையும் முடிந்த அளவு செய்து தருமாறு கேட்டுக்
கொண்டனர்.
இத்திட்டத்திற்கு உதவியளித்தத சகல கட்டார் வாழ் கற்பிட்டி
சகோதரர்களுக்கும் நன்றிகள்.
KDSQ Media














0 Comments