சுகாதார மற்றும் சுதேச அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களை சுவசிரிபாயவில், அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இன்று (28) அரச உயர் அதிகாரிகள் சகிதம் சந்தித்தார்.
புத்தளம், சம்மாந்துறை, குருநாகல், மன்னார், வவுனியா, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அமைச்சர் ராஜிதவினால் உடனடியாக பல்வேறு தீர்வுகள் வழங்கப்பட்டது.
புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலை சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் முன்மொழிந்த அனைத்து கோரிக்கைகளுக்கும் அமைச்சர் ராஜித ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளார்.
பூர்த்தி செய்யப்படாத நிலையிலுள்ள இரண்டு மாடி தாதிமார் கட்டிடத்துக்கு 30 மில்லியன் ரூபாவும், 101 மில்லியன் ரூபா பெறுமதியான 36 அறைகளைக் கொண்ட வைத்தியர்களுக்கான தங்குமிட புதிய கட்டிடத்துக்காக 40 மில்லியன் ரூபாவும் சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
CT Scan, Dialysis Unit உள்ளடங்களாக 50 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள், 500kv மின் உற்பத்தியாக்கி இயந்திரம் அனைத்தையும் வழங்குமாறு சுவசிரிபாய உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
புத்தளத்தில் நிலவிவரும் தாதிமார்கள் (80) வைத்தியர்கள் (80) குறைப்பாடுகளுக்கு தீர்வாக குருநாகலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள மேலதிகமான நியமனங்களை இடமாற்றம் செய்வதையும் புத்தளம் மாவட்டத்தில் புதிய நியமனங்கள் வழங்குமாறும் பணித்தார்.
ஒரு மாத காலத்துக்குள் கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு 150மில்லியன் பெறுமதியான மூன்று மாடி கட்டிட ஆரம்பிப்பதற்கான பணியையும் மாகாண இயக்குனர் Dr.பரீத் அவர்கள் முன்னெடுக்கும் படியும் சுகாதார அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம் நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், லக்சல பிரதிதலைவர் வீ.சீ இஸ்மாயில்,அமைச்சரின் மேலதிக செயலாளர் சஹீன் கான், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் முஸம்மில் மற்றும் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-Iflal Ameen-






0 Comments