Subscribe Us

header ads

ஞானசார தேரர் வப்பாட்டியை இப்பொது வைத்திருப்பது யார்?


கட்டுநாயக்கவில் இருந்து கராச்சி செல்லும் யூ எல் 183 விமானத்தின் விபரங்கள் எந்த ஏரியா கண்ட்ரோலுக்கும் போய்ச் சேரவில்லை என்று டெலி போன்கள் அலறத் தொடங்கின..குறித்த ப்ளைட்டுக்குப் பொறுப்பான நண்பனைப் பிடித்துக் கடிந்து கொண்ட போது, “இது வி.ஐ.பி.ப்ளைட் என்பதற்கான எந்த ஒரு அடிக்குறிப்பும் இல்லை” என்றான். ‘என்னவாய் இருந்துவிட்டுப் போகட்டும்,வேலையைச் செய்து முடி!’ என்று கட்டளைகள் பறந்தன..நண்பனின் பிரச்னை வித்தியாசமானது..குறித்த விமானத்தில் ஜனாதிபதி மைத்திரி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பாகிஸ்தான் செல்கிறார்.’அவர் எப்படி சாதாரண பிரயாணிகளோடு ஒரு பிரயாணியாக செல்ல முடியும் ? மகிந்த இத்தனை நாட்களும் தனி ப்ளைட்டில் ராஜ வாழ்க்கை நடத்தினார் அல்லவா? ‘இந்த அதிர்ச்சியை அவனுக்கு ஜீரணிக்கக் கஷ்டமாய் இருந்தது..ஆனால் அதுவே நிஜமானது..மைத்திரி மக்களோடு மக்களாய் விமானத்தில் சென்றார் என்பது செய்தியானது.’எப்பேர்பட்ட எளிமையான மன்னர் கிடைத்துவிட்டார்’ என்று முழு இலங்காபுரியும் அகமகிழ்ந்தது...

இன்னொரு சம்பவம்..ஜனாதிபதி மைத்திரி முதல் தடவையாக ஜனாதிபதி மாளிகைக்கு வந்து இருந்தாராம்..பகல் 11 மணி ஆகியதாம்..சுற்றி இருந்த எச்சங்களும் சொச்சங்களும் மிச்சங்களும் காக்காய்களும் ஈ ஈ என்று இளிக்கத் தொடங்கியதாம்..என்ன என்று பார்த்தால் ‘லன்ச் இற்கு என்ன பண்றது ? அச்சச்சோ...மிகப் பெரிய பிரச்னை அல்லவா?’..ஒரு அல்லக்கை மைத்திரியை நெருங்கி. “மகா பிரபு, ஹில்டன்லயா அல்லது தாஜ் சமுத்ராவிலா பகல் லன்ச் இற்கு ஆர்டர் கொடுக்க வேணும் ? தங்களின் கட்டளையைச் செப்புங்கள்” என்றதாம்...விவசாயின் புதல்வன் அருந்தவப் புத்திரன் மைத்திரியும் , “எனக்கு வீட்டில் இருந்து சாப்பாடு வருகிறது, உங்கள் சாப்பாடு, உங்கள் பாடு,” என்று சொன்னாராம்..மேலும் இப்படியான ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிய உணவுகளுக்கு தனது ஆட்சியில் தடா என்றாராம்..நீதி வழுவாத மன்னனின் இந்த எளிமையைக் கண்டு ஜனாதிபதி வளாகத்தில் இருந்த டீ எஸ் சேனாநாயக்கவின் சிலைக்கே அழுகை வரும் போல் இருந்ததாம்..

மேலே சொல்லப்பட்ட இரண்டு ஈசாப் நீதிக் கதைகளுக்கும் அப்போது விசில் அடித்து கைதட்டிய கூட்டத்தின் பிரதிநிதிகள் நாம்..இப்போது ரிப்பீட் ஆடியன்ஸ் போல கேட்கும் போது காதால் இரத்தம் வரப் பார்க்கிறது..அந்தளவுக்கு இலங்கை சரித்திரத்தில் மிக மோசமான ஒரு ஆட்சியை இந்த மைத்திரி தலைமையிலான தலையாட்டி பொம்மைகள் கூட்டம் தந்து கொண்டு இருக்கிறது..இந்த ஆட்சியைப் போல இனவாதம் மிக்க ஆட்சி இதுவரை சுதந்திரத்திற்குப் பின் எமது தேசத்தில் ஏற்பட்டதே இல்லை..நாற வாயன் ஞானசார என்ற வால் இல்லாத பிக்குவைப் பிடித்து கூண்டில் அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது புதிய தலைவலி வந்து இருக்கிறது..பெளத்தர்களின் அதி உயர் மார்க்க பீடமான அஸ்கிரிய விகாரை பீடாதிபதியே, “ஞானசாரவின் நடவடிக்கைகளில் வேண்டுமனால் தவறு இருக்கலாம்,ஆனால் கொள்கை ரீதியாய் சரி காண்கிறோம்.” என்று சொல்லி இருக்கிறார்..அப்படி என்ன மா வோ சேதுங் இன் கொள்கை என்று புரியவில்லை..செய்தி அறிக்கைகளில் சிங்கள தொலைக்காட்சிகள் இதற்கு 15 நிமிடங்களுக்கு மேல் முக்கியத்துவம் கொடுத்ததில் இருந்து நாட்டிற்கு ஒரு மிகப் பெரும் மெஸேஜை சொல்ல வந்து இருக்கிறார்கள் என்பது நிதர்சனமாகிறது.

'நான் வைத்திருக்கவில்லை, நீ வைத்திருக்கிறாய், போடா! நான் இல்லை, அவன் வைத்திருக்கிறான்' என்று ஞானசாரவை யார் வைத்து இருக்கிறார் என்று மிகப் பெரிய இழுபறி வேறு நிலவுகிறது..நடக்கிற தமாஷுகளைப் பார்க்கும் போது ஞானம் முழு ஊருக்கும் வைப்பாட்டியாக இருப்பது தெரிகிறது..இப்போது யார் வைத்து இருக்கிறார் என்பது தான் கேள்வி..நாளை ஞானம் கோர்ட்டுக்கு வர பாதுகாப்பு வேறு கேட்கப்பட்டு இருக்கிறது..தொடர்ச்சியாய் முஸ்லிம் கடைகளுக்கு எதிரான தீ வைப்பு வைபவங்கள், பொதுபல இன் அடியாட்கள் நாலைந்து பேர் கைது செய்யப்பட்டு இருப்பதனால் ஒத்திப் போடப்பட்டுள்ளன..ஆனால் பிரச்னை முன்னரை விடத் தீவிரமானது..பெளத்தத்தின் அனைத்து மத பீடங்களும் ஓரணியில் திரண்டுவிட்டன.ஞானத்தை கைது செய்ய முன் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரைக் கைது செய்யச் சொல்லி அழிச்சாட்டியம் புரிகின்றன..இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை..

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், ஏகபிரதிநிதிகளான தலைமைகளுக்கும் பள்ளியில் இருந்து வெளியே வந்தால் வெயிலுக்கு இலேசாக வியர்ப்பதைத் தவிர வேறு பாதிப்புக்கள் வாழ் நாளில் இல்லை..ஆனால் நிராயுத பாணியான பொதுஜனம் தான் பாவம். எமது சிவில் சமூகம் சிங்கள புத்திஜீவுகளுடன் இணைந்து விரைந்து செயற்பட வேண்டிய தருணம் இது..திரும்பவும் நாட்டின் முதற் பிரஜையான பொலன்னறுவை விவசாயி இன் மகனைத் தேடிச் சென்று புலம்புவதில் துளி பிரயோசனம் இருக்கப் போவதில்லை..


-Zafar Ahamed-

Post a Comment

0 Comments