Subscribe Us

header ads

டிஜிடல் ஏ.டி.எம் இயந்திரத்திற்கு வயது ஐம்பது!


ஏ.டி.எம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டன. தேவைப்படும்போது ஏ.டி.எம் இல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் பணத்தை கையில் வைத்துக் கொள்வதில்லை.
இந்த ஏ.டி.எம் இயந்திரங்கள் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் இந்த ஏ.டி.எம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரம் லண்டன், என்பீல்டில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது.
உலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்ட லண்டன் என்பீல்ட் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்கிளை
ஏ.டி.எம் இயந்திரம் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெபர்ட் பரோன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இயந்திரத்தின் பொன்விழாவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அந்த ஏ.டி.எம் இயந்திரம் தங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.
ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த பரோனிற்கும் பார்க்லேஸ் வங்கி கிளைக்கும் ஏற்பட்ட துரித ஒப்பந்தங்களால் பார்க்லேஸ் கிளையில் ஏ.டி.எம் இயந்திரம் தொடங்கப்பட்டது.
"உலகெங்கிலும் அல்லது பிரித்தானியாவில் எனது பணத்தை நானே எடுத்துக் கொள்ள ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தோன்றியது" என 2007 ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்தார் பரோன்.
மேலும் சொக்லெட் வழங்கும் இயந்திரத்தை பார்த்து தனக்கு ஏ.டி.எம் இயந்திரத்திற்கான யோசனை வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஒட்டோமேடட் டெலர் மெஷின் (Automated Teller Machine) என்று அழைக்கப்படும் இந்த ஏ.டி.எம் இயந்திரங்கள் 1967ஆம் ஆண்டு பெரும் விழாக் கோலத்துடன் நிறுவப்பட்டது.
உலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டதைக் குறிக்கும், லண்டன் என்பீல்ட் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்கிளையின் நீல நிறப் பலகை
முதன் முதலில் தொலைக்காட்சி பிரபலமான ரெக் வார்னே என்பவர், ரசீது ஒன்றை செலுத்தி பின் ஆறு இலக்க எண்ணை அழுத்தி பத்து மொர மொரப்பான ஒரு பவுண்ட் நோட்டுகளை அந்த இயந்திரத்தில் பெற்றுள்ளார்.
அதன்பின் ஒன்பது நாட்களுக்கு பிறகு தனது நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்தை ஸ்வீடன் அறிமுகம் செய்தது.
இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளன. தங்களுக்கு தேவையான பணத்தை தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டு பண பரிமாற்றத்தில் மக்கள் தாங்கள் விரும்பும்படியான சேவையை பெற்று கொள்வதற்கு இது வித்திட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
பார்க்லேஸ் கிளையில் முதல் ஏ.டி.எம் தொடங்கப்பட்டது

Post a Comment

0 Comments