Subscribe Us

header ads

விளம்பரத்திற்கு எதிராக பொதுபல சேனா இயக்கம் முறைப்பாடு


புரவெசி பலய அமைப்பினால் வெளியிடப்பட்ட விளம்பரம் தொடர்பில் பொதுபல சேனா இயக்கம் முறைப்பாடு செய்துள்ளது.
பிரபல பத்திரிகை ஒன்றில் புரவெசி பலய மற்றும் நீதியான சமூகத்திற்கான அமைப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இல்லாத இனவாதம் மற்றும் மதவாதம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி விளம்பரம் வெளியிட்டுள்ளதாகவும்இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வைத் தூண்டி அதன் ஊடாக பிரபலமடையவும் குறித்த அமைப்பு முயற்சிப்பதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விளம்பரம் முழுக்க முழுக்க இனவாதத்தை தூண்டும் வகையிலான விளம்பரம் என தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பரபல்யம் அடையும் நோக்கில் இவ்வாறு போலி விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த அமைப்பிற்கு எதிராக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments