Subscribe Us

கட்டாரில் இருந்த இலங்கை வருபவர்கள் கட்டார் ரியாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றும் போது 11.70 ரூபா குறைவாக வழங்கப்படுகிறது. அவதானம்


கட்டார் மீது நான்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் கட்டாரில் இருந்த இலங்கை வருபவர்கள் கட்டார் ரியாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றும் போது இலங்கை மத்திய வங்கி நாணயமாற்று பொறுமதியில் இருந்து பத்து சுமார் 11.70 ரூபா குறைவாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

23 ம் திகதி இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று விகிதப்படி கட்டார் ரியால் ஒன்றுக்கான இலங்கை ரூபா 41.72 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் இலங்கை விமான நிலையத்தில் நாணயமாற்று நிலையங்களில் 30 ரூபாவே வழங்கப்படுவதாக ஊர்ஜிதமான தகவல் கிடைத்துள்ளது.

விடுமுறை காலங்களில் இலங்கை வருபவர்கள் விமான நிலையத்தில் பணம் மாற்றுவதால் ஆயிரம் ரியாலுக்கு 11700 ரூபாவை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது..

Post a Comment

0 Comments