Subscribe Us

header ads

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இடம்பெறும் குழப்பங்கள் கற்றுத்தரும் பாடம்தான் என்ன? (SIFAS NAZAR)


இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் மார்புதட்டி சொல்லிக்கொண்டிருக்கின்ற விடயம்தான் நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவியவர்கள் நாங்கள், மஹிந்த அரசை கவிழ்த்தவர்கள் நாங்கள் என்பதாக ஆனால் இவ்நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் பூர்த்தியானாலும் இன்னும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் தத்தமது இருப்பினை நிலைநாட்டிக்கொள்வதிளே அனுபவிக்கின்ற துன்பங்களை பட்டியலிட முனைகின்றேன். 

வடமாகாணத்தை பொறுத்தவரையிலே முசலிப்பிரதேசம் அதிகூடுதல் முஸ்லிம்களின் வாக்கு வங்கியினை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். 

அப்பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு வில்பத்து விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக்கப்படுகின்ற நிலையினை நல்லாட்சி அரசிளே காணுகிறோம். 

அதே போன்று அம்பாறை மாவட்டம் கிழக்கிலே அதிகூடிய முஸ்லிம் வாக்குகளை கொண்ட பிரதேசமாகும். அம்மாவட்டத்திளே மாணிக்கமடு சிலை வைப்பு விவகாரம் சூடுபிடித்து வருவதை காணமுடியும். 

அதேபோன்று வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதியே புத்தளம் தேர்தல் தொகுதியாகும். 

அப்பிரதேசத்தில் அறுவைக்காட்டு குப்பை விவகாரம்,சாலாவை ஆயுதக்கிடங்கினை கற்பிட்டி பிரதேசத்திற்கு மாற்றுதல் போன்ற பிரச்சினைகளை அம்மக்கள் நல்லாட்சியிலே எதிர்கொள்கின்றனர். 

மேற்குறிப்பிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் இருக்கின்ற ஒற்றுமை அனைத்துமே முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசம் என்பது மட்டுமாகும். 

குறிப்பாக இப்பிரச்சினைகளின் பின்னனியில் இருப்பவர்கள் நல்லாட்சி அரசின் அங்கத்தவர்கள் என்ற உண்மையையும் நம் சமூகம் அறியும். ஆனாலும் இப்பிரச்சினைகளுக்குரிய பின்னனிகளை அறிவதிலே தான் எம் சமூகம் பின்னே நிற்கின்றோம். 

உண்மையில் இப்பிரச்சினைகளுக்குரிய பின்னனியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்வு கூறல்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

(தொடரும்)

SIFAS NAZAR B.A, RDG LLB

Post a Comment

0 Comments