Subscribe Us

தேசிய தலைவர்களின் ஆதரவாளர்களிடத்தில் சில கேள்விகள் BY:இஸ்ஸதீன் றிழ்வான்



1. உங்கள் தலைவர் கடந்த 2 வருடங்களுக்குள் எத்தனை முறை பாராளூமன்றத்தில் பேசினார்....?
2. விலையேற்றம் / வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பற்றி எப்போதாவது பேசி இருக்கிறாரா..?
3. சமூகப் பிரச்சினை பற்றி பேசவென தனிப்பட்டமுறையில் ஜனாதிபதியை அல்லது பிரதமரை அல்லது உரிய அமச்சரை அல்லது அதிகார சபையை சந்தித்து தீர்த்ததுண்டா? அல்லது அதற்கான அழுத்தங்களை பிரயோகித்ததுண்டா.........?
4. தேர்தல் அல்லாத காலங்களில் குக்கிராமங்களுக்கு விஜயம்செய்து அங்குள்ள அடிப்படைத் தேவை பற்றி பேசி அதற்கான தீர்வை வழங்கியதுண்டா....? 5. அரச நிதி ஒதுக்கீடு அன்றி ஏனைய வழியில் நிதியுதவி பெற்று ஏதாவது சேவை செய்ததுண்டா.....?

6.ஜந்து வருட பதவி காலத்தில் செய்துமுடிக்க வேண்டும் என எதிர்கால திட்டங்கள் / திட்டமிடல் ஏதும் உண்டா...? 7. உங்களுடைய சத்திய, சாணாக்கிய தேசிய தலைவர் தொடர்பாக தொடராக கூறப்படும் ஊழலை மறுப்பது குறித்து உரிய ஆதாரத்துடனான பதில் இதுவரைக்கும் வழங்கப்பட்டுள்ளதா? இல்லையென்றால் ஏன்?


8. குறித்த அரசியல்வாதியின் ஆதரவாளன் அல்லது ஊழியன் என்பதால் அவரிகள் செய்யும் அனைத்தையும் ஆதரிக்கமுடியுமா...... அவர் செய்வது தப்பு என்று தெரிந்த பின்பும்?
9. பொதுவான சமூகப் பிரச்சினைகளின் போது உங்கள் தலைவர் ஏனைய அரசியல்வாதிகளுடன் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செல்லாதது குறித்து தீவிர ஆதரவாளன் என்ற அடிப்படையில் உங்களுடைய பதில் என்ன...?


இதற்கான விடைகளை உங்களுக்குள்ளேயே தேடி பதில் எழுதுங்கள்.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

Post a Comment

0 Comments