Subscribe Us

header ads

தனது உயிரை பொருட்படுத்தாது இன்னொரு நபரொருவரை காப்பாற்றிய தேரர் - வீடியோ..


தனது உயிரை துச்சமாக மதித்து நீரில் மூழ்கிய நபரொருவரை தேரர் ஒருவர் காப்பாற்றியுள்ள விதம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது

இவ்வாறு நீரில் மூழ்கிய நபரை காப்பாற்றியவர் பதுளை - உட கொஹோவில விகாரையில் வசிக்கும் வேஹெரயாயே விமலசார தேரர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

நபரொருவர் சிலருடன் ஜயகங்கையில் நீராட சென்றுள்ள நிலையில், அவர் ஆழமான பகுதியில் நீராட சென்ற போது நீரில் மூழ்கியுள்ளார்.

இதன் போது இதனை அவதானித்த குறித்த தேரர் கடும் முயற்சியில் அவரை காப்பாற்றியுள்ளார்.

இதனை ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளி கீழே..

Post a Comment

0 Comments