புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவமொன்றில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன், இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக உருமாறியதை அடுத்து (ஞாயிற்றுக்கிழமை) குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி கத்திக் குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த 21 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மற்றைய நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments