Subscribe Us

header ads

அன்று ஞானசார தேரரை கைது செய்யவிடாமல் தடுத்தவர்களே நல்லாட்சியிலும் தடுக்கின்றனர்?


இலங்கை நாட்டில் இனவாத கோசங்கள் என்றுமில்லாதவாறு தலை தூக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக் காலத்தின் கடைசி இரு வருடங்களில் இவ்வாறான இனவாத  செயற்பாடுகள் நடந்தேறியிருந்தன.இனவாதத்தை வளர்ப்பதில் பொது பல சேனா அமைப்பின்  செயலாளர் ஞானசார தேரர் பிரதான பாத்திரம்  ஏற்றிருந்தார்.

அப்போது ஜாதிக ஹெல உறுமய பொதுபல சேனாவிற்க்கு  பின்னணியில் இருந்து சகல உதவிகளையும் செய்துவந்தது. குறிப்பாக சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் வெளிப்படையாகவே அவ்வமைப்புக்கு வக்காலத்து வாங்கி வந்தார்கள்

அன்று அவரை கைது செய்யுமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகக் கடுமையான அழுத்தங்களை வழங்கி இருந்தனர்.இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க ஆலோசித்தார்.

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் தாங்கள் இவ் ஆட்சியை விட்டு விலகுவோமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழுத்தத்தை வழங்கி ஞானசார தேரரை கைது செய்ய முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளி இருந்தனர்.இவ் விடயமானது அன்றே சில ஊடகங்களில் கசிந்திருந்த போதும்,அமைச்சர் றிஷாத் பதியூர்தீன் ஞானசார தேரரை கைது செய்யுமாறு என்னோடு அமைச்சரவையில் சண்டையிட்ட போது,அவ்வாறு அவரை கைது செய்தால் தாங்கள் இவ்வாட்சியில் இருந்து விலகிவிடுவோமென அமைச்சர் சம்பிக்க மிரட்டியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட பலர் பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

இது பொய்யென இது வரை அமைச்சர் சம்பிக்க தரப்பினர் மறுக்காமை இது உண்மை என்பதை பறை சாட்டி நிற்கின்றது.அண்மையில் தோன்றியவர் தான் இந்த ஞானசார தேரர்.அன்று,அதாவது 2002ம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய ஞானசார தேரர் வடிவில் வலம் வந்தவர் தான அமைச்சர் சம்பிக்கவாக்கும்.அவர் வேறு சில நோக்கங்களை கருத்தில் கொண்டு இன்று ஞானசார தேரர் வடிவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

சில காலங்களாக உறங்கி கிடந்த ஞானசாரை ஏதோ ஒரு பாரிய திட்டத்துடன் களம் இறக்கியுள்ளார்.இதனை முஸ்லிம்கள் மிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய நல்லாட்சியிடம் எத்தனையோ வழிகளில் ஞானசார தேரரை அடக்குமாறு முஸ்லிம் தாப்பிலிருந்து அழுத்தங்கள் வழங்கப்படுகின்ற போது இவ்வாட்சி செவி சாய்ந்ததாக இல்லை.

உண்மையில் ஒரு சமூகத்தை நேரடியாக எதிர்க்க ஒரு அரசு எப்போதும் விரும்பாது.அதாவது ஞானசார தேரர் போன்றவர்களின் செயற்பாடுகளை இவ்வரசு பொருந்திக் கொள்ளாது.இருந்த போதிலும் அவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகளின் அழுத்தங்களால் அவர்கள் இவர்கள் செய்வதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம்.ஞானசார தேரரை அன்று கைது செய்யாமல் தடுத்தவர்கள் தானா இன்றும் கைது செய்யாமல் தடுக்கின்றனர்? என்பதை இவ்வரசு வெளிப்படுத்த வேண்டும்.

அ.அஹமட்

(joint opposition tamil unit director)

Post a Comment

0 Comments