கூட்டு எதிர்க்கட்சியின் மே தினப் பேரணிக்குச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த முதலாம் திகதியிலிருந்து குறித்த நபர் காணாமல் போயுள்ளார் என அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை சீதாகம பகுதியை சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன், இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments