வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஒரு புத்திசாலி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி நேற்றையதினம் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்த வெளியிட்ட அவர், கிம் ஜொங் உன் மிக இளவயதிலேயே பாரிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிம், ஏனைய தலைவர்களுடன் சரிசமமாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிம் புத்திசாலி என மக்கள் தெரிவிக்கின்றதாகவும் அவருடைய தந்தை உயிரிழக்கும் போது கிம்மிற்கு 26 அல்லது 27 வயதிருக்கும். இளவயதானாலும் அவர் தளபதிகள் மற்றும் ஏனையோருடன் விவேகமாக செயலாற்றுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளதில் ஏதேனும் உட்பொருள் இருக்குமா என சர்வதேசத்தினர் சிந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments