இயற்கை சீற்றத்தினால் அழிவடைந்த பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் ஒருநாள் சேவையின் ஊடாக இலவசமாக வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்.எம்.என்.ஜே. புஸ்பகுமார இதனைத் இன்று தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளம் அல்லது மண் சரிவு காரணமாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் தொலைந்தோ அல்லது அழிவடைந்தோ போனவர்கள், இலவசமாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.
பிரதேச கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் விண்ணப்பம் செய்து, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments