முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டம் பிரமாண்டமான முறையில் காலிமுகத் திடலில் நடைபெற்றது.
இந்தப் பேரணிக்காக சுமார ஐந்தரை கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அணியின் உள்ளக தகவல்களின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேடை அமைத்தலுக்கு மாத்திரம் 87 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இங்கு வருகை தந்த அனைவருக்கான செலவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும், அந்த செலவு தொடர்பான தகவல் குறிப்பிடத்தக்க சிலரிடம் மாத்திரம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போரணியில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட போதும், அவர்களுக்காக பெருந்தொகை மதுபானம் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கான செலவீனங்களை வெளியிட மஹிந்த அணியினர் அச்சம் கொண்டுள்ளனர். இதன்மூலம் பிழையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த பேரணிக்காக சுமார் ஐந்தரை கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் இன்றையதினம் மஹிந்தவினால் குறித்த செலவு அறிக்கை வழங்கப்படவுள்ள நிலையில், அதன்மூலம் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments