ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால் என்பவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது, மும்பையில் உள்ள Jagjivan Ram Hospital மருத்துவரிடம் காட்டியுள்ளார், பரிசோதனையில் காலில் ஊசிகள் இருந்துள்ளது தெரிய வந்தது. அதை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
பின்னர் சிறுது காலம் கழித்து பத்ரிலாலுக்கு கழுத்தில் வலி வந்துள்ளது, பரிசோதித்ததில் கழுத்திலும் ஏகப்பட்ட ஊசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அறுவை சிகிச்சை செய்தே அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர், ஆனால் பத்ரிலாலுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பத்ரிலாலுக்கு உடல் முழுவதும் 75 ஊசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஊசிகள் தனது உடலில் எப்படி சென்றது என தனக்கு தெரியவில்லை என பத்ரிலால் கூறியுள்ளார்.
தொண்டை மற்றும் இதர பாகங்களில் உள்ள ஊசி பத்ரிலாலின் உறுப்புகளுககு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பதை கண்டு நாங்கள் ஆச்சர்யப்பட்டோம் , மேலும் இத்தனை ஊசிகள் இவரது உடம்பில் எப்படி சென்றது என்பது எங்களுக்கு வியப்பாகவும் புரியாத புதிராகவும் உள்ளது என பத்ரிலாலை பரிசோதனை செய்த மருத்துவர் Nikam தெரிவித்துள்ளார்.
காரணம் அந்த ஊசிகள் வெளியில் இருந்து சென்றதற்கான எந்த வடுவோ காயங்களோ பத்ரிலாலின் உடலி்ல் இல்லை.
சிறுப்பு நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு இந்த ஊசி மனிதனின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்ய உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






0 Comments