மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியின் விமானியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார்.
இதன்போது அவரின் தைரியமான செயற்பாடு குறித்து ஜனாதிபதி பாராட்டியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கச் சென்ற உலங்கு வானூர்தி பத்தேகம, இனிமங்கட பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
எனினும் அதில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த விமானியின் திறமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை விமானப் படைக்கு சொந்தமான எம்;.ஐ. 17 உலங்குவானூர்தி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என விமானப் படைப் பேச்சாளர் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து துருப்பினரும் பாதுகாப்புடன் இருப்பதாக வான்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



0 Comments