Subscribe Us

header ads

ஒபாமாவின் இந்த வாழ்க்கைக்கு ஒரு பெண் தான் காரணமாம்: ஆனால் அது அவர் மனைவி இல்லையாம்..!


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வாழ்க்கையை குறித்து டேவிட் கரரோம் என்பவர் புத்தகமாக எழுதி உள்ளார். 

தி மேகிங் ஆப் பராக் ஒபாமா என்ற பெயரில் வரும் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் டேவிட் கரரோம் அதில் இடம்பெற்றுள்ள சில சுவாரஸ்யமான சம்பவங்களை வெளியிட்டுள்ளார். 

அதில், மிச்செல் ஒபாமாவை சந்திப்பதற்கு முன் ஷிலா மியோனி ஜகர் என்ற பெண்ணை ஒபாமா காதலித்துள்ளார். 

தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் இருமுறை தெரிவித்து திருமணம் செய்து கொள்வோமா என கேட்டுள்ளார். 

ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஏனெனில், ஒபாமா அப்போது தான் தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 

மேலும் வயதில் சிறியவராக இருந்ததால் ஜகரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. 

தற்போது, ஒகியோவில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக ஜகர் பணியாற்றி வருகிறார். 

தன்னுடைய காதல் விவகாரம் குறித்து எழுத்தாளர் டேவிட்டிடம் ஜகர் தெரிவித்துள்ளார். 

நான் வெள்ளை பெண்ணுடன் டேட்டிங் சென்றிருந்தால், ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக நின்றிருக்கமாட்டேன் என ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அந்த புத்தகத்தில் டொனால்டு டிரம்பினை தனது முன்மாதிரியாக ஒபாமா கருதினார் என்ற தகவலும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

Post a Comment

0 Comments