முஸ்லிம் தலைவரென தன்னை தானே கூறிக்கொள்ளும் அஸாத் சாலி மஹிந்த போபியா எனும் நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளதாக பானதுறை முன்னாள் பிரதேச சபையின் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் ..
முஸ்லிம் தலைவரென தன்னை தானே கூறிக்கொள்ளும் அஸாத் சாலி மஹிந்த போபியா எனும் நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு இலாபம் இருந்தால் யூதர்களையும் ஆதரிக்கும் கொள்கை கொண்டவர் அசாத் சாலி என்பதை இன்று முஸ்லிம் சமூகம் நன்றாக விளங்கி வைத்துள்ளது.இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாக இனவாதிகளுக்கு தகவல் வழங்கியதும் அவரது குடும்பமே என்பது நாடறிந்த உண்மை.
இப்படியான ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்துவருகிறார்.ஏற்கனவே நாட்டில் இனவாதத்தை
வளர்த்துவிட ஞானசார தேரரின் அளவுக்கு சமமாக பங்காற்றியுள்ள அஸாத் சாலியின் இந்த செயற்பாடு பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எம்மோடு கதைக்கும் பெரும்பான்மை மக்கள் இந்த நாட்டில் கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை ஒரு முகவரியில்லாத ஒருவர் கேவலமாக விமர்சிப்பது தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.அவரின் வரம்பு மீறிய இந்த செயற்பாடு பெரும்பான்மை மக்களிடம் ஆத்திரத்தையும்கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதே அஸாத் சாலி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஹஜ் குழு தலைவராக இருந்த போது செய்த மோசடிகள் தொடர்பில் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.மஹிந்த ராஜபக்ஷ அவரை ஹஜ் குழுவில் இருந்து நீக்கியமை தொடர்பிலும் நாம் தெளிவுபடுத்த வேண்டியதில்லை.அது தொடரில் அவரது தாய் மாமனார் அமைச்சர் பௌசி இன்றும் சாட்சியம் கூறுவார்.
அவரின் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாத அசாத் சாலியின் கடந்த கால செயற்பாடுகளை நாம் விமர்சனம் செய்வது எமது சமுகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை நாம் ஆராய விரும்பவில்லை.
யாரையாவது திருப்திப்படுத்தவோ அல்லது எதையாவது அடைந்துகொள்ளும் அரசியல் நோக்கிலோ முன்னாள்
ஜனாதிபதியை கோவலமாக விமர்சிப்பதை அஸாத் சாலி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே,பொரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தமை தொடர்பில் எம்மோடு கடும் குரோதத்தில்இருக்கும் கடுபோக்குடைருக்கு இவ்விடயம் தீனி போடுவதாக அமைந்துவிடும்.
இவரை
போன்றவர்கள் முஸ்லிம்கள் சம்பந்தமான எந்த விடயங்களிலும் மூக்கை நுழைக்காமல்
இருப்பதே சிறந்ததாகும்.தற்போது வில்பத்து பிரச்சினையில் இவர் தலையிடுகிறார்.இதன்
மூலம் அது வேறு வடுவம் பெற்றுவிடும் என்ற அச்சம் முஸ்லிம் மக்களிடத்தில்
எழுந்துள்ளது..
எனவே,நன்பர் அஸாத் சாலி சிங்கள மக்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கி சமூகத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்க வேண்டாம் என தான் வேண்டிக்கொள்வதாகவும் இது விடயமாக தான் ஜம்மியதுல் உலமா உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக அவர் குறிப்பிடுள்ளார்.


0 Comments