Subscribe Us

header ads

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்


ஜான்சன்&ஜான்சன் மருந்து நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்திய பின்னர்தான், தனக்கு கருப்பை புற்றுநோய் வந்தது என்று வழக்கு தொடர்ந்த பெண்ணொருவருக்கு, அந்த நிறுவனம் 110 மில்லியன் டாலருக்கு மேலா அபராத தொகை வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

4 தசாப்தங்களாக முகப்பவுடரை பயன்படுத்தி வந்த பின்னர், தனக்கு அதனால் புற்றுநோய் உருவானதாக மிசௌரி மாகாணத்தின் வர்ஜினியாவை சேர்ந்த 62 வயதான லோயிஸ் ஸ்லெம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தங்களுடைய பொருட்களோடு தொடர்படைய புற்றுநோய் ஆபத்து பற்றி போதியளவு வாடிக்கையாளா்களை எச்சரிப்பதற்கு இந்த நிறுவனம் தவறிவிட்டது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
ஆனால், கருப்பை புற்றுநோய்க்கும் முகப்பவுடருக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்திற்கு எதிராக அதனுடைய பவுடர் பொருட்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சுமார் 2,400 வழக்குகளில் புனித லூயிஸ் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்புத்தான் மிகவும் நீளமானதாகும் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்லெம்பின் கருப்பையில் புற்றுநோய் வந்திருப்பது முதலில் 2012 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அது மீண்டும் வந்து, நுரையீரலுக்கும் பரவிய பிறகு, ஸ்லெம்ப் கீமோதெரப்பி எனப்படும் ரசாயன சிகிச்சை எடுத்து வருகிறார்.
தான் பயன்படுத்திய பொருட்களில் ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான முகப்பவுடரும், குளித்த பிறகு பயன்படுத்தும் பவுடரும் அடங்குவதாக ஸ்லெம்ப் தெரிவித்திருக்கிறார்.
"அறிவியல் சான்றுகளை இந்த நிறுவனங்கள் புறக்கணித்துள்ளதோடு, அமெரிக்க பெண்களின் மீதான பொறுப்புணர்வை அவை தொடர்ந்து மறுத்து வந்துள்ளன என்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்" என்று ஸ்லெம்பின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

உடல் நலத்திற்கு கேடு விளைவித்ததற்கு 5.4 மில்லியன் டாலர் கட்டாய இழப்பீடாவும், அபராத தொகையாக 105 மில்லியன் டாலரையும் வழங்க இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய போவதாக தெரிவித்துள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், "இந்த ஆண்டு நடைபெறுகின்ற பிற விசாரனைகளுக்காக தயார் செய்து வருகின்றோம். குழந்தைகளுக்கான ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடர் பாதுகாப்பானது என்று நியாயப்படுத்துவதை தொடர்வோம்" என்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
"கருப்பை புற்றுநோயால் துன்பப்படும் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு நாங்கள் ஆழமான அனுதாபங்களை தெரிவிக்கிறோம்” என்றும் அது கூறியுள்ளது.
கடந்த ஆண்டு முகப்பவுடர் தொடர்பான மூன்று வழக்குகளில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தோல்வியடைந்தது. ஆனால், மிசௌரி நீதிபதி இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக பக்கசார்பு நிலை எடுத்ததால், மார்ச் மாத முதல் விசாரணையில் இந்த நிறுவனம் முதல் வெற்றியை பெற்றது.
புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்

Post a Comment

0 Comments