Subscribe Us

கற்பிட்டி, முந்தல், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் Vocational Training Authority (VTA) தொழில் சார் பயிற்சி நிலையங்கள் விரைவில்

கற்பிட்டி, முந்தல், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் Vocational Training Authority (VTA) தொழில் சார் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து இளைஞர், யுவதிகள் நன்மையடைய வழியமைத்துக் கொடுக்கும் படி திறன் அபிவிருத்தி, வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் கவனத்துக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மூலம் கொண்டு வந்திருந்தோம்.

அதன் ஒரு கட்டமாக திறன் அபிவிருத்தி வாழ்க்கை தொழில் பயிற்சி அமைச்சிலிருந்து Chairman- VTA வுக்கு இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் படி கோரப்பட்டுள்ளது. 

இது போன்ற தொழில் பயிற்சி நிலையங்கள் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-Mohamed Muhusi-


Post a Comment

0 Comments