Subscribe Us

header ads

'சானாக்கள் வென்றார்கள் சோனாக்கள் மான்டார்கள்' – BY: இஸ்ஸதீன் றிழ்வான்


நல்லாட்சி என்ற செல்லா ஆட்சியில் ஞானசாரக்கள் வென்றார்கள்,

நல்லாட்சி என்று செல்லா ஆட்சியை கொண்டுவந்த சோனாக்கள் / முஸ்லிம்கள் தோற்றுப்போனார்கள்.


ஒரு பள்ளிக்கு கல் எறிந்தால் விழித்துக்கொள்வோம்,

இல்லையேல் நெருப்புவைத்தால் பதரியடித்து பாதைக்கு வருவோம் முஸ்லிம்களாகிய நாம்.


இன்னுமொரு அளுத்கம தீப்பற்றி எறியும் வரை மீண்டும் தூங்குவோம்.

நமது இந்த வீக்னசை பயன்படுத்தி இனவாதிகள் மெளனமாக காரியம் சாதித்து தொடர் வெற்றியில் வீர் நடைபோடுகிறார்கள்.


மகிந்த ஆட்சியில் சண்டித்தனத்தில் சாதித்தார்கள்,

மைத்திரி ஆட்சியில் சிவப்பு கம்பளம் விரித்த VIP க்களாக காரியம் சாதிக்கிறார்கள்,

முழு வேகத்துடன் மகிந்த ஆட்சியை வீழ்த்தி மைத்திரி கையில் கொடுத்துள்ளோம், நல்லாட்சி என்ற பெயரில் தனது திருவிளையாட்டை சிறுபான்மை சமூகத்தின் மீது காட்டுகிறார்கள்.

மகிந்த ஆட்சியில் வெள்ளை வேன் கலாச்சாரம் மூலம் ஒரு சில தனிமனிதர்களே குறிவைத்தார்கள்

மைத்திரி ஆட்சியில் வர்த்தமானி கலாச்சாரம் மூலம் சிறுபான்மை சமூகத்தின் இருப்பையே குறிவைக்கிறார்கள்.

மஹிந்த ஆட்சியில் சில பழைய பள்ளிகளை உடைத்த அதேநேரம் சில புதிய பள்ளிகளை நிர்மாணித்தார்கள்,

மைத்திரி ஆட்சியில் சில பள்ளிகளுக்கு கல் எறிந்து, முஸ்லிம் கிராமங்களை குறிவைத்து பெளத்த விகாரைகளை நிர்மாணிக்கின்ற முயற்சியை மிக மும்முரமாக செய்துவருகின்றார்கள்.

அரச நியமனங்கள் வேண்டி மாதக் கணக்கில் ஆரப்பாட்டங்கள் நடக்கின்றன நல்லாட்சியில் எந்த தீர்வும் இல்லை,

ரக்பி வீரர் தாஜுதீனின் கொலைக்கான தீர்வை வருடக்கணக்கில் படம் ஓட்டுகின்றனர் நல்லாட்சியின் சாதனையாக,

மகிந்த ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டிய ஞானசாரக் கும்பலை நல்லாட்சியில் நாய்க்கூட்டில் அடைப்பதாக கதை, திரைக்கதை வசனம் எழுதிய சந்திரிக்கா உட்பட்ட குழுவினர் காணாமல் போய்விட்டனர் இந்த நல்லாட்சியில்.

ஊழல் ஆட்சி செய்த மகிந்த குடும்பத்திற்கு தண்டனை வழங்குவதாக தேர்தல் பரப்புரை செய்த நல்லாட்சியாளர்கள் எங்கே......?

முடிவில்லா தொடர் நாடகமாக படரும் இந்நல்லாட்சி சிறுபான்மைச் சமூகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை, செய்யவும் மாட்டார்கள், காரணம் இப்போது நாட்டை ஆட்சி செய்வது சில இனவாத சாராக்கள் மட்டுமே.

இடையில்............முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களது Boss (ஜனாதிபதி, பிரதமரை) திருப்திப்படுத்துவதையே முதல் பணியாக ஏற்று, தலைசாய்த்து நிறையேற்றி வருகின்றனர் வாக்களித்த சமூகத்தின் காணி போனால் என்ன ஆணி போனால் என்ன என்ற போக்கில்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

Post a Comment

0 Comments