Subscribe Us

header ads

பாடகர் சுனில் பெரேராவின் கருத்தால் அமெரிக்காவில் சர்ச்சை.. ஜனாதிபதியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.


அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்திற்கு அங்கிருந்த அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன்போது சுனில் பெரேரா மீது மேற்கொள்ளப்படவிருந்த பாரிய தாக்குதல் நடவடிக்கை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தடுக்கப்பட்டதுடன், பாடகர் உயிர் தப்பியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சுனில் பெரேராவை இவ்வாறான நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments