Subscribe Us

header ads

மீதொட்டமுல்ல பகுதியில் இலங்கை கிரிகட் அணியினர்களின் மனிதாபிமானம்

கொலன்னாவ - மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தற்காலிகமாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியதுடன், தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிவாரணங்களையும் வழங்கி வைத்துள்ளனர்.
ரங்கன ஹேரத், திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல ஆகியோர் இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.


Post a Comment

0 Comments