Subscribe Us

header ads

நுவரெலியா செல்லும் சுற்றுலாவில் மாஷா அல்லாஹ் போடும் கும்பள்கள் இவைகளை தவிர்க்கவும்


இந்தப் புத்தாண்டு காலத்தில்  வியாபரம் செய்து சிங்கள  மக்களின் பணத்தையெல்லாம் முஸ்லிம்கள் அள்ளிவிடுவதாக  சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பரவலான  அபிப்ராயம் இருக்கிறது.


"சீசன்" வியாபாரத்தில் நல்லதொரு "டார்கட்" அடித்துவிட்டு நுவரெலியாவுக்கு குடும்பச் சுற்றுலா சென்று உல்லாசமாக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

சீசனுக்கு வியாபரம் செய்வதையோ விடுமுறையில் சுற்றுலா செல்வதையோ யாருக்கும் விமர்சிக்கவோ, தடுக்கவோ முடியாது . இருந்தாலும்,


மதங்களுக்கிடையில் முருகளை ஏற்படுத்துவதற்கென்றே பேரினவாத இயக்கங்கள் இயங்கும் ஒரு நாட்டில்...

ஆயிரக்கணக்கான இனவாத வலைத்தளங்கள் இயங்கும்  ஒரு நாட்டில்...


முஸ்லிம் வியாபரத்தளங்களுக்கு தீ வைக்கப்படும் ஒரு நாட்டில்...

முஸ்லிம் பள்ளிகள் உடைக்கப்படும் ஒரு நாட்டில்....

இப்படியான விடுமுறை காலங்களில் முஸ்லிம்களின் செயற்பாடுகள் இனவாதிகளுக்கு தீனியாகவோ, நல்ல சிந்தனைகொண்ட சிங்கள மக்களுக்கு  சங்கடங்கள் ஏற்படும் வண்ணமோ அமைந்துவிடக்கூடாது.


குறிப்பாக நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்திருப்பவர்கள்  சூழல் பாதுகாப்பு, வீதி ஒழுங்குகளைப் பேணுதல், மக்கள் போக்குவருத்துக்கு பங்கம் ஏற்படாதவாறு வெள்ளிக்கிழமை  ஜும்மா தொழுகையை அமைத்துக் கொள்ளல் மாதிரியான விடயங்களில்  மிகவும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்.


அதேபோல் ரோட்டை மறைத்து ஜும்மா  தொழுதுவிட்டு  "நுவரெலியா பள்ளியில் இன்றைய ஜும்மா தொழுகை மாஷா அல்லாஹ்" என்று பேஸ்புக்கில் பதிவு போடும் மாஷா அல்லாஹ் கும்பளும் கடந்த வருடம் போல் வீன் வம்புகளை  இழுத்துவிடாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது.

-Safwan Basheer-

Post a Comment

0 Comments