இலங்கையிலுள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அடிமையாகி உள்ளதாக பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அணில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை இளைஞர்கள், நவீன இணையத்தள தொழில்நுட்பமான பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை தவறான புரிந்துக் கொண்டுள்ளதாகவும், அவ்வாறான சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இளம் வயதை வீணடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன கையடக்க தொலைப்பேசிகளை சரியான முறையில் பயன்படுத்தினால் முழு உலகத்தை வெற்றி பெற கூடிய வாய்ப்பு இலங்கை இளைஞர்களிடம் உள்ளதாக பேராசிரியர் அணில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெயிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகின் அதி நவீன தொழில்நுட்பமான சபீ என்ற தொழில்நுட்த்தை எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு அறிமுகப்படுத்தி வைப்பதற்கு தான் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் ஊடாக இந்த நாட்டில் தொழில்வாய்பற்ற இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்கும் எனவும், காட்சி தொடர்பு (விஷுவல் கம்யூனிகேஷன்) தொடர்பில் சர்வதேச புகழ்பெற்ற பேராசிரியர் அணில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கை இளைஞர்களை வறுமையில் இருந்து மீட்டுக் கொள்ள முடியும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தூர நாட்டில் இருந்து, தாய் நாட்டில் உள்ள வீடு பூட்டினை திறப்பதற்கு, எரிவாயு, நீர் கட்டமைப்பை கட்டுப்படுத்தல், போன்ற பல வாய்ப்புகள் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments