கெலக்ஸி S8 கைப்பேசி ஐபோன் போன்று உருவாகியுள்ளது.
புதிய கெலக்ஸி S8 கைப்பேசியில் 5.7 இன்ச் மற்றும் 6.2 இன்ச் என இரண்டு வித திரை அளவுகளை கொண்டுள்ளது.
பெரிய திரை கொண்ட கைப்பேசி S8 பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கைப்பேசியில் ஹோம் பட்டன் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கெலக்ஸி S8 கைப்பேசியில் ஒற்றை கெமரா அமைப்பும், S8 பிளஸ் கைப்பேசியில் டூயல் கெமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்ற அமைப்பு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கைப்பேசிகளிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மாதம் ஏப்ரல் 28ம் திகதி முதல் சாம்சங் கெலக்ஸி S8 கைப்பேசிகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments