Subscribe Us

header ads

K.F.L - 2017 CHAMPION கிண்ணம் வென்றது ROCKING GUYS இனால் உறிமம் பெறப்பட்ட PANTHERS FC அணி.


KCC இனால் நடாத்தப்பட்ட கற்பிட்டிப் பிரதேசத்திற்குட்பட்ட 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி 2017:03:12 திகதி பகல் இரவுப் போட்டிகளாக அல் - அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த லீக் போட்டியில் 5 அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. PANTHERS FC அணியானது லீக் சுற்றில் 4 போட்டிகளில் பங்கு கொண்டு 3 வெற்றிகளையும் ஒரு போட்டியில் சமநிலை என்ற வகையில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் PANTHERS FC யை எதிர்த்தாடும் வாய்ப்பை லீக் சுற்றில் இரண்டாம் இடம் பெற்ற WEST TIGERS அணி பெற்றுக் கொண்டது. இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற வகையில் KFL- 2017 கிண்ணத்தை PANTHERS அணி சுவீகரித்துக் கொண்டது.

இப் போட்டி நிகழ்வை ஏற்பாடு செய்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்திய KCC உறுப்பினர்களுக்கும் குறிப்பாக Haslan MohamedMusammil MusaaMohamed Maheen மற்றும் MUFEETH ஆகியோருக்கும் PANTHARS FC அணி வீரர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், RG இன் வேண்டு கோளை ஏற்று விசேட பயிற்சியாளராய் செயற்பட்ட Mr. J.M. RILWAN அவர்களுக்கும், வீரர்களுக்கு உருதுணையாய் நின்று ஊக்கம் அளித்த ROCKING GUYS உறவுகளுக்கும் மற்றும் விசேடமாக ROLL BACK இன் Amrin Khan அவர்களுக்கும் இவ்வேலையில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது ROCKING GUYS..




Post a Comment

0 Comments