Subscribe Us

கற்பிட்டியில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளங்காணப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை


டெங்கிலிருந்து கல்பிட்டி மக்களை பாதுகாக்கும் முகமாக எதிர் வரும் 29.03.2027 தொடக்கம் 04.04.2017 வரை டெங்கு ஒழிப்பு வாரம் கல்பிட்டி சுகாதார திணைக்களத்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இக்காலத்தில் வீடு வீடாக சென்று அவதானிக்கவுள்ளதாகவும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளங்காணப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டநடவடிக்கைகளுக்கு அல்லாமல் எமது குழந்தைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் எமது சுற்று சுழலை பாதுகாப்பாக வைப்பதோடு தமது கிராமங்களில் கிராம மக்களை ஒன்றிணைத்து சிரமமான பணிகள் மேற்கொள்வதன் மூலம் எமது ஊரிலிருந்து டெங்கை ஒழிப்போம்.

-Rizvi husaain

Post a Comment

0 Comments