Subscribe Us

header ads

கையடக்க தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பினால் யுவதிக்கு திருமணம்... இலங்கையில் சம்பவம்


கையடக்க தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பினால் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது.
குறித்த இளம் பெண்ணின் தொலைபேசிக்கு தவறாக வந்த அழைப்பினால் ஏற்பட்ட நட்பு, திருமணத்தில் முடிந்துள்ளது.
இதனால்,ஆசை வார்த்தைகள் காட்டி, குறித்த இலங்கைப் பெண்ணை ஆண் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆறு மாதங்களாக நீடித்த தொலைபேசி மூலமான நட்பு திருமணத்தில் முடிந்ததும், இருவரும் குவைத் நோக்கி சென்றுள்ளனர்.
இவ்வாறு குவைத் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
குறித்த ஆணுக்கு குவைத்தில் ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனினும் திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய ஆணிடம் குறித்த பெண் நீதியை கேட்டுள்ளார்.
ஆனால் அந்த ஆண் விடுத்த கொலை அச்சுறுத்தல் காரணமாக, இந்த விடயங்களை வெளியில் சொல்லாமல் அந்த இலங்கைப்பெண் மூடி மறைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments