Subscribe Us

header ads

52 வயது பெண்ணின் கண்மூடித்தனமான காதல் : 32 வயதான நபர் பெண்னிடம் மோசடி

காதலுக்கு வயதெல்லை கிடையாது என்பது உண்மைதான். அந்த வகையில் 32 வயதுடைய ஆண் ஒருவருக்கும் 52 வயதுடைய பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த போதே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.
இருவரும் தங்கள் காதலை பகிர்ந்துக் கொண்டிருந்த சில நாட்களிலேயே ஹோட்டலில் சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும், பணம் இருந்தால் தா என குறித்த 32 வயது நபர் கேட்டுள்ளார்.
காதலில் கண்மூடித்தனமாக இருந்த அந்த 52 வயது பெண், 10 ஆயிரம் ரூபா பணத்தையும் அணிந்திருந்த தங்க ஆபரணத்தையும் (chain) கொடுத்துள்ளார்.
இரண்டு நாட்களில் நான் திரும்பி வருவேன் என குறித்த நபர் அந்த பெண்ணிடம் சத்தியம் செய்துள்ளார். இருப்பினும் அவர் திரும்பி வரவில்லை.
இதனையடுத்து, குறித்த பெண் தன் 19 வயது மகனுடன் சென்று கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிவித்துள்ள போதும், அந்த தகவலை சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கு போதுமானதாக இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments