Subscribe Us

header ads

ஒரே மாதத்தில் 13 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா?... தினமும் இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்க

உடல் எடை குறைய வைப்பதற்கு மாயம், மந்திரம் கடுமையான உழைப்பு தேவையில்லை. ஸ்மார்ட்டான சில விஷயங்களை நாம் செய்தால் உடல் எடை நிச்சயம் குறையும்.
நமது இந்தியகள் அந்த காலத்தில் கண்டுபிடித்த ஒருவிஷயத்தைதான் இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உடல் எடை குறைய கண்டுபிடித்துள்ளார்கள்.
இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இங்கே இந்த கட்டுரையின் ஹீரோ யாருமில்லை. சீரகம்தான். சீரகத்தை இங்கே சொல்லப்பட்டிருப்பதுபோல் செய்தால் உங்க உடல் எடை குறையும். எப்படியென்று பார்க்கலாம்.
ஈரானில் உள்ள மெடிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தில் உடல் எடை குறைப்பு பற்றிய ஆராய்ச்சி நடந்தது. அதில் 2 பிரிவுகளாக பெண்களை பிரித்தனர்.
இருபிரிவினருக்கும் சமமாக தினமும் 500 கலோரி உணவு வழங்கும்படி செய்தனர். காய்கறி பழங்களை இருபிரிவிற்கும் சமமாக கொடுத்தனர்.
இவற்றோடு முதல் பிரிவிற்கு மட்டும் தினமும் 3கிராம் பொடித்த சீரகப்பொடியை யோகார்ட்டில் கலந்து கொடுத்தனர். இரண்டாவது பிரிவினருக்கு சீரகப்பொடி இல்லாமல் வெறும் யோகார்ட்டை கொடுத்தனர்.
ஒரே மாதம் பிறகு அவர்களை சோதித்தபோது, வெறும் யோகார்ட் சாப்பிட்டவர்களை காட்டிலும் , சீரகப்பொடியை கலந்து சாப்பிட்ட பிரிவினர் 13 கிலோ எடை குறைந்து காணப்பட்டனர்.கொழுப்பை எரிக்கும் மகத்தான வேலையை சீரகம் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் இறுதியில் கூறினர்.
அது போல் நம் ஊரில் பின்பற்றுவதைப் போல் மிக எளிதான குறிப்பு எதுவென்றால் இரவில் சீரகத்தை நீரில் ஊற வைத்து மறு நாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஆச்சரியப்படும்படி உடல் எடை குறைவதை காணலாம்.

Post a Comment

0 Comments