Subscribe Us

header ads

Just In.... முக்கிய பாதாள உலகத் தலைவர் சமன் சுட்டுக்கொள்ளப்பட்டார் (Photos)

களுத்துறை பகுதியில் சற்று முன் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் ஐந்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர் சமன் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
மேலும், 4 பேர் காயத்திற்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாளக் குழு உறுப்பினர்களுடன் சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாத குழுவினராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.




Post a Comment

0 Comments