Subscribe Us

மாத்தறை மருத்துவமனையில் நடந்துள்ள கொடூர சம்பவம்!!பெண் மருத்துவ அதிகாரியின் செயலா? பதறவைக்கும் ஹிரு சி.ஐ.ஏ காணொளி

மாத்தறை - கம்புறுபிடிய மருத்துவமனையில் நோயாளர் ஒருவர் கழிப்பறையில் விடப்பட்டுள்ள சம்பவம் ஒன்றுதொடர்பில் ஹிரு சி. ஐ.ஏ வெளிப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், குறித்த நோயாளரை தேடிச் சென்றது ஹிரு சி.ஐ.ஏ இதற்கமைய குறித்த நோயாளர் நேற்று மாலை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.



குறித்த நோயாளர் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹிரு சி.ஐ.ஏ வுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து, கழிப்பறையில் உள்ள நோயாளரை தேடி, 4 ஆம் இலக்க மருத்துவமனை அறைக்கு ஹிரு சி.ஐ.ஏ சென்றது.



இதனிடயே, நோயாளர் பாரிதாபகரமான முறையில் மருத்துவமனை கழிப்பறைபகுதியில் இருந்துள்ளமை அறியவந்துள்ளது.



இதன்போது, நோயாளருக்கு உணவு வழங்கப்பட்டுள்ள விதமும் ஹிரு சி.ஐ.ஏ வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



சம்பவம் குறித்து ஹிரு சி.ஐ.ஏ நோயாளரிடம் தகவல் அறிய முற்பட்ட போது, நோயாளரால் பேச முடியாமை காரணமாக, அது சாத்தியப்படவில்லை.



சிகிச்சை பெறுவதற்கு வந்த நோயாளர் மீது இவ்வாறு பாகுபாடு காண்பித்தல் நியாயமானதா? சம்பவம்தொடர்பில் ஹிரு சி.ஐ.ஏ கம்புறுபிடிய மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் வினவியது.



ஹிரு சி.ஐ.ஏ மருத்துவ அதிகாரியிடம் வினவியதற்கு அமைய, நோயாளரின் அடிப்படை உரிமை மீறியது பிரதேச செயலாளரா?



குறித்த நோயாளரின் பரிதாபமான நிலை குறித்த மேலதிக விபரங்கள் ஹிரு சி.ஐ.ஏ காணொளியில் இணைப்பு...


Post a Comment

0 Comments