Subscribe Us

யூதமும் சேதமும்



கருகி அழியட்டும்
கயவர்கள் தேசம்
உருகி ஓடட்டும்
ஓநாய்களின் உடமை.

காஸாவின் பூமியை
கண்டபடி கொழுத்தியவரின்
காசு பணம் சொத்துக்கள்
தூசுமின்றிப் போகட்டும்

குண்டு மழை பொழிந்து
குதூகலம் கண்டவர்கள்
துண்டு இடமும் இன்றி
தொடர்ந்து ஓடட்டும்.

நடுநிலை வாதியென்று
நாலு பேர் கிளம்பி வந்து
படும் பாட்டைப் பார்த்து
பாவப் பட வேண்டுமென்பார்.

அதிகாரக் கரம் கொண்டு
ஆக்கிரமித்த பூமியிலே
சதி செய்யும் கும்பல்கள்
சரிவது பாவமில்லை.

ஓயாது போராடி
ஓரிரு கிழமைகளில்
தீயை அணைத்தாலும்
திடுக்கம் தொடரட்டும்.

அடுத்தவரின் துக்கத்தில்
அகமகிழ்ந்து எழுதவில்லை
படுத்திய அநியாயத்தின்
பாதிப்பில் எழுதியது.


Mohamed Nizous

Post a Comment

0 Comments