இந்த அரசின் பேச்சை நம்பி தமது அரசினால்
முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைக் கொள்வனவு செய்யும்
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்தின் பின் அவற்றை இழக்கத்
தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
450 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைத் தற்போது 1.1 பில்லியன் ரூபாவுக்கு விற்பனை
செய்வதற்கான முயற்சி இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறான அபிவிருத்தித்
திட்டங்களை இந்த அரசு விற்பனை செய்தாலும் ஆட்சி மாற்றம் வந்ததும் அவை
மீளப்பெறப்படும் என்பதைக் கவனத்திற்கொண்டு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள
வேண்டும் எனவும் அளுத்கமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து மஹிந்த
ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments