Subscribe Us

ஆங்கிலத்தில் உரையாற்றிய ரவிகருணாநாயக்க எதிரணி உறுப்பினர்கள் சிரிப்பு


2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டது.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் உரையாற்றியிருந்தார்.
இதன் போது சில சொற்களை உச்சரிப்பதற்கு சிரமப்பட்டமையாலும், சில சொற்களைத் தவறாக உச்சரித்தமையாலும் பாராளுமன்றில் சிரிப்பொலி எழுந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நிதியமைச்சர் ஆங்கிலத்தில் உரையாற்றும் போது, ‘பூகம்பாவ’ (பூதியதிர்ச்சி) என்று கூற, அவையிலிருந்த எதிரணி உறுப்பினர்கள் சட்டென்று சிரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியினர் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைகள் அடங்கிய புத்தகத்தைக் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இவ்வாறு கேட்டீர்களா...? என, சற்று அழுத்தமாக கேள்வியெழுப்பியிருந்தார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments