பாறுக் ஷிஹான்
அமைச்சர்
றிசாட் பெயரில் பாரிய மோசடி யாழில் சம்பவம் என்ற செய்திக்கும் தனக்கும்
எவ்வித தொடர்பும் கிடையாது என சர்வமதங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கான
அமைப்பின் பொதுக்குழு உறுப்பினரும் தகவல் வழிகாட்டல் மத்திய நிலையத்தின்
செயலாளருமாகிய எம்.முஹம்மட் நிபாஹீர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய
தினம் சில இணைய ஊடகங்களில் அமைச்சர் றிசாட் பெயரில் பாரிய மோசடி யாழில்
சம்பவம் என தெரிவித்து அவரது தொலைபேசி இலக்கத்துடன் செய்தி ஒன்று வெளியாகி
இருந்தது.இந்த செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு
கூறினார்.
நிறுவனம்
ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் றிசாட் பதியுதினின் உதவியாளர்
என கூறி பல தமிழ் பெண்களிடம் பண மோசடி செய்த நபர் தற்போது யாழ் பொலிஸார்
கைது செய்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அச்செய்தி தொடர்ந்து
தனது தொலைபேசி இலக்கத்தை இறுதியாக அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதனை
தான் வண்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறான செய்திகளின் உண்மைத்தன்மையினை
பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட பின்னர்
பிரசுரிப்பது நன்று.தற்போது சமூக சேவையில் பல்வேறு சேவைகளை செய்து வரும்
என்னை வேண்டுமென்று கேவலப்படுத்தும் நோக்கில் இச் செய்தியுடன்
சோடிக்கப்பார்க்கின்றனர்.
எனவே
தான் இனிவரும் காலங்களில் இவ்வாறான தனிப்பட்ட நபர்களது செய்திகள் வருகின்ற
போது உண்மை தன்மை வெளிப்படுத்தப்பட்ட பின் அதை பிரசுரம் செய்யுமாறு
கேட்டுக்கொள்கின்றேன் என கேட்டுக்கொண்டுள்ளார்.



0 Comments