Subscribe Us

கற்பிட்டி மண்டலக்குடா கடற்கரை வீதி புனரமைப்பு -படங்கள்

ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளரும் கற்பிட்டி அபிவிருத்திக் குழுத் தலைவருமான U.M.M.Akmal அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி பிரதான அமைப்பாளர் M.N.M.Nasmi அவர்களால் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து. கற்பிட்டி பிரதேச சபை ஒதுக்கீட்டில் கற்பிட்டி (மண்டலக்குடா) கடற்கரை ஊடாக பாடசாலை வரையிலான பாதை நிர்மாணிக்கப் படுகின்றது.
(இப் பாதையானது)

முன்னால் அரசியல் வாதிகளினால் கவனிக்கப்படாத நிலையில் மழை காலங்களில் அப் பகுதி வாழ் மீனவ மக்கள் மிகவும் அசோகரியத்துக்கு உற்பட்டிருந்த நிலையில். ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M.Akmal அவர்களிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இப் பாதை நிர்மாணிக்கப்படுகின்றது.

(நிழல் தரும் நிஜம்)

Post a Comment

0 Comments